திருமணம் செய்வதாக கூறி 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் சித்ரவதை..!
திருமணம் செய்வதாக கூறி 13 வயது சிறுமியை கடத்தி வைத்து ஐந்து நாட்களாக பாலியல் சித்திரவதை செய்த ஆட்டோ ஓட்டுநர் வாகன தணிக்கையில் சிக்கியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள திருவள்ளூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் ஆட்டோ ஓட்டும் பாலசுப்ரமணி என்பவருடன் நட்பாக பழகி வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி சிறுமி கடத்தப்பட்ட நிலையில் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே ஆம்னி வேனில் சிறுமியை கடத்தி சென்ற பாலசுப்ரமணி பெருமாநல்லூரில் அருகே வாகன தணிக்கையில் சிக்கினார். அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.






