ஹைதியில் அதிபர் படுகொலை..! அவசர நிலை பிரகடனம்..!
ஹைதியில் அதிபர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அந்த நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கரீபியன் கடல் பகுதியில் உள்ள தீவு நாட்டில் தனிப்பட்ட வீட்டில் தங்கியிருந்தார். அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அவரது மனைவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இடைக்காலப் பிரதமர் அவசர நிலை பிரகடனம் செய்யப் படுவதாக அறிவித்துள்ளார்.
இது மனிதத்தன்மையற்ற, காட்டுமிராண்டித்தனமான செயல் என்றும் ஜோசப் கண்டித்துள்ளார். தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் அரசை தொடர்ந்து வழிநடத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
அதிபர் ஒருவரை சுட்டுக் கொன்றவர்கள் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் பேசியதாக தகவல் கிடைத்திருக்கிறது என கிளாடி ஜோசப் தெரிவித்துள்ளார். இடைக்கால பிரதமராக அண்மையில் நியமிக்கப்பட்ட கிளாடி ஜோசப் இன்னும் முறைப்படி பதவியேற்பு கூட செய்யவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.






