--- --:--:-- --

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்க கட்டுப்பாடு..!

3

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 40 சதவீத கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடமிருந்து எப்படி கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற விபரங்களை பள்ளிக் கல்வித் துறை ஆணையர் வெளியிட்டுள்ளார்.

 

அதில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தனியார் பள்ளிகளில் 40 சதவீத கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இரண்டு மாதத்திற்குள் 35 சதவீத கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும், மீதம் 25 சதவீத கட்டணத்தை எப்படி வசூல் செய்வது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

75 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் கட்டணத்தை செலுத்த கூறி அழைத்து வருவதாக அண்மையில் புகார் எழுந்துள்ளது.

 

இதைத்தொடர்ந்து தனியார் பள்ளிகள் கட்டண வசூலை முறைப்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon