இன்று முதல் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்..!
இன்று முதல் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கொரொனா இரண்டாம் நிலை காரணமாக கடந்த மே 24-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அமலில் இருந்து வருகிறது.
இதனால் மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட அனைத்து விதமான பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எனவே ஒரே மாதிரியான தளர்வுகளை தமிழகம் முழுவதும் அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று முதல் காலை 5.30 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பத்து நிமிட இடைவெளிகளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் இந்த நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.






