மார்பிங் புகைப்படங்கள் வைத்து மிரட்டியதால் மாணவி தற்கொலை..! தாயும், மகனும் கைது..!
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவனின் செல்போனில் ஏராளமான திடுக்கிடும் வீடியோக்கள் கிடைத்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கடந்த 13ஆம் நாள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாணவிகள் தங்கி படித்து வந்த சிவகுமார் என்பவர் மாணவியை மிரட்டி பணம் பறித்து மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவதாக கூறியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து மதுரையில் இருந்த கேசவ குமாரையும் அவருக்கு உடந்தையாக இருந்த தாயையும் கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கேசவ குமாரின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் அதில் இருந்த வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
கல்லூரி மாணவர்களை கொடூரமாக தாக்கிய அவரிடம் பணம் பறிப்பதும், ஜூனியர் மாணவர்களை ரோட்டில் அடிப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.






