யாஸ் உடன் ஜோடி சேரப்போகும் நடிகை தமன்னா..!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் தமன்னா அடுத்து கேஜிஎப் நடிகர் யாஸ் உடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா அண்மையில் அவர் நடித்து வெளியான நவம்பர் வெப்சீரிசுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதே தெலுங்கு நடிகர் கோபியுடன் இவர் நடித்துள்ள திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் நாரதன் இயக்கத்தில் நடிகர் யாஸ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்ற. படத்தில் யாஸ்க்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






