தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை..!
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மங்கலம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பொழிந்தது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, ஆதிரங்கம், மணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் அங்கு குறுவை சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் பரவலாக காணப்பட்டது. புதுச்சேரியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்த நிலையில் மின்கம்பம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
பின்னர் சிறிது நேரத்தில் வெடித்து சிதறியதால் காவல்துறையினர் அங்கு விரைந்து மின் இணைப்பை துண்டித்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.






