மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்..!
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் சேலத்திலிருந்து சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டன. நாமக்கல் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த மாதேஷ் என்ற 26 வயது இளைஞர் விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்தார்.
அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்ததையடுத்து சேலம், காவேரி மருத்துவமனையில் பெறப்பட்ட உறுப்புகள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த உறுப்புகளை கொண்டு ஹெலிகாப்டரில் அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டது.
சேலம் விமான நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சேலம் விமான நிலையத்தில் விமான சேவை இல்லை என்பதால் வழக்கமான செயல்பாடுகள் எதுவும் நிறைவேறவில்லை. உறுப்பு தானம் குறித்து சேலம் விமான நிலைய இயக்குனர் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து 15 நிமிடங்களில் விமான நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சேலத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் இதயம், நுரையீரல் அடங்கிய பெட்டி கொண்டு வரப்பட்டு அரைமணி நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் சென்னை சென்றடைந்தது.







