தவறான தகவல்களை வழங்கி இ-பாஸ் பெற்றால் கடுமையான நடவடிக்கை..!
தவறான தகவல்களை வழங்கி இ பாஸ் பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. தமிழகமெங்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காரணமாக 27 மாவட்டங்களில் மட்டும் திருமணத்திற்கு பதிவுபெற்று பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தவறான தகவல்களை பதிவிட்டு இ பாஸ் பெற்றால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒரு நிகழ்வுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இ பதிவு செய்யப்பட்டால்கி ரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருமணத்திற்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும் ஒரு இபதிவு மட்டுமே செய்யவேண்டும் எனவும் இதனை மீறி இதில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.







