--- --:--:-- --

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டம் இன்று முதல் துவக்கம்..!

8

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டம் இன்று தொடங்குகிறது. இதற்காக மத்திய அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசிகளை மாநில அரசுகள் முன்னுரிமை அடிப்படையில் கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி சுகாதார பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டாம் டோஸ் நிலுவையில் உள்ளவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் முன்னுரிமை வரிசையில் தடுப்பூசியைப் போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதற்காக மொத்தம் உற்பத்தியாகும் தடுப்பூசியில் 75 விழுக்காடு மாநிலங்களுக்கு வழங்குமாறும் இனிமேல் தடுப்பூசி போட கோவின் இணைய தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் நேரடியாக தடுப்பூசி மையங்களுக்கு சென்று பதிவு செய்து தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon