பாட்டு படப்பிடிப்பில் பங்கேற்க விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் சென்ற நயன்தாரா.!
அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் பாட்டு படப்பிடிப்பில் நயன்தாரா பங்கேற்கவுள்ளார். பிரேமம் பட வெற்றிக்கு பிறகு எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்ததால் அல்போன்ஸ் தற்போது பாட்டு என்னும் படத்தின் பணிகளை தொடங்கியுள்ளார்.
காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் பகத் பாசிலுடன் நயன்தாரா நடிக்கிறார். பாட்டு படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் தனி விமானத்தில் கொச்சிக்கு சென்றுள்ளார் நயன்தாரா.
விக்னேஷ் சிவன் உடன் சென்ற அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வருகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




