தொகுப்பாளராகப்போகும் நடிகை தமன்னா..!
பிரபல நடிகை தமன்னா டிவி ஒன்றில் தொகுப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் . இந்திய தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று மாஸ்டர் செஃப்.
இந்த நிகழ்ச்சியை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் தெலுங்கு வெர்ஷனில் தமன்னா தொகுத்து வழங்க இருக்கிறார் .
அடுத்த மாதம் தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கும் தமன்னா இதற்காக அதிக தொகையை ஊதியமாகப் பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழில் விஜய், சேதுபதியும் கன்னடத்தில் கிச்சா சுதீப் இதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






