--- --:--:-- --

27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் மட்டும் இயக்க அரசு ஆலோசனை..!

1

மிழகத்தில் தொற்று குறைந்து உள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் மட்டும் இயக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, மதுரை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு கூடுதல் சலுகைகளை அறிவித்து வருகிறது.

 

அந்த வகையில் இந்த 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் மட்டும் இயக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 விழுக்காடு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகங்கள் ஆயத்தமாக இருப்பதாகவும் இந்த வார இறுதிக்குள் பேருந்து இயக்ககுவதை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

 

மேலும் மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து சேவை இருக்கும் வகையில் இயக்க அரசு முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon