--- --:--:-- --

கொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..!

13

கொரொனா மூன்றாம் அலை எந்நேரமும் தாக்கலாம் எனவும் குழந்தை மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மூன்றாவது அலையின் தாக்கம் ஏற்படும் சூழல் உள்ளது.

 

18 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாவது நிலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் டீன்களுக்கு கல்லூரிஇயக்குனர் நெறிமுறைகளை அறிவித்துள்ளார்.

 

அதில் மருத்துவமனைகளில் ஆக்சிசன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் ஐசியூ படுக்கை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும் குழந்தைகள் பிரிவில் நான்கில் ஒரு பகுதி செவிலியர்களை அவசரகால பணிக்காக தயார்படுத்த வேண்டும்.

 

பொது மருத்துவம் மற்றும் அறிவியல் துறை மருத்துவர்களையும் கொரொனா மூன்றாவது அலையில் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் போன்ற வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon