--- --:--:-- --

விபத்தில் சிக்கிய நடிகர் சஞ்சரி விஜய் காலமானார்..!

11

ருசக்கர வாகன விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னட நடிகர் சஞ்சரி விஜய் காலமானார். 2011 ஆம் ஆண்டு முதல் கன்னடத் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் சஞ்சரி விஜய். நானு அவன் அல்ல அவளு என்கிற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.

 

சஞ்சரி விஜய் அவரது நண்பர் நவீன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழியில் இருந்த மின்கம்பத்தில் வாகனம் மோதியதில் பலத்த காயங்களுடன் பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறினர். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு எடுத்து வைத்து அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon