கிரிக்கெட் விளையாடும் 6 வயது சிறுமியின் வீடியோ வைரல்..!
கிரிக்கெட் விளையாடும் 6 வயது சிறுமியின் வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது. கேரளா மாவட்டம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் பாத்திமா என்ற 6 வயது சிறுமி. தந்தை அவரது 3 வயது தம்பிக்கு மட்டும் கிரிக்கெட் கற்றுக் கொடுத்துள்ளார்.
இதை பார்த்து பாத்திமா தனது தந்தையிடம் நான் பெண் என்பதால் தனக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுக்கவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் தந்தை அவருக்கும் கிரிக்கெட் கற்றுக் கொடுத்துள்ளார்.
6 வயது மட்டுமே பூர்த்தியான பாத்திமா எனும் சிறுமி மிகவும் அற்புதமாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது வைரலாக வருகிறது. அந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.





