முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய நபர்..!
முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கிஷோர் கே ஸ்வாமி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வரும் இந்த நபர் பேரறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு விட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
கலவரத்தை தூண்டுதல் அரசுக்கு எதிராக செயல்பட தூண்டும் வகையில் அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்புவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் கிஷோர் கே ஸ்வாமியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






