செவ்வாய் கிரகத்தின் 3 அரிய புகைப்படங்கள்..!
சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயில் சூரங் ரோவர் எடுத்த புகைப்படங்களை சீனா வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சிக்காக சீனா கடந்த ஆண்டு ராக்கெட் மூலம் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.
இந்த விண்கலம் கடந்த மாதம் 22ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அதிலிருந்து ரோவர் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அந்த ரோவர் தரையிறங்கியதுடன் செவ்வாயில் 3 புகைப்படங்களை அனுப்பியுள்ளது.







