ஹைதராபாத்தில் காவலரை தொழிலதிபர் ஒருவர் செருப்பால் தாக்கிய காட்சி..!
ஹைதராபாத்தில் காவலரை தொழிலதிபர் ஒருவர் செருப்பால் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. சங்கரெடி மாவட்டத்திலுள்ள பதஞ்சேருவில் வழக்கு தொடர்பாக நோட்டீஸ் கொடுக்க சென்ற காவலர் ஒருவரை தொழிலதிபர் செருப்பால் அடித்து சித்ரவதை செய்துள்ளார்.
அவருடைய கூட்டாளிகளும் காவலரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட தொழிலதிபர் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.






