ஜூன் 21ஆம் தேதி முதல் புதிய தடுப்பூசி கொள்கை அறிமுகம்..!
பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்ற இன்று மாலை 5 மணிக்கு தொடங்கினார். பிரதமர் மோடி அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என தெரிவித்துள்ளார். மூக்கில் விடும் சொட்டு மருந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டது என்றும், இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகள் 75 சதவிகிதத்திற்க்கும் அதிகமாக மத்திய அரசு, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் தடுப்பூசி வினியோகம் அதிகரிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். ஜூன் 21ஆம் தேதி முதல் புதிய தடுப்பூசி கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.






