இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 30 பேர் உயிரிழப்பு..!
பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதி விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 50 பேர் காயமடைந்திருக்கிறார்கள். கராச்சியிலிருந்த சார்கோதா நோக்கி சென்று கொண்டிருந்தால் விளாட் எக்ஸ்பிரஸ் ரயில் சிந்து மாகாணத்தில் அடைந்த போது திடீரென தடம்புரண்டு எதிரே வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது.
இதில் இரண்டு ரயில் பெட்டிகளும் தலைகீழாக கவிழ்ந்து உள்ளன. இந்த கோர விபத்தில் பெண்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மொத்தம் 14 பெட்டிகள் தடம்புரண்டதாகவும் 8 பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும் பலர் பெட்டிகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமரின் கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்தவும் விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.






