பள்ளிக் கல்வியில் தமிழகம் 3ஆம் இடம் பிடித்துள்ளது..!
அகில இந்திய அளவில் பள்ளிக் கல்வி மேம்பாட்டு சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களில் பஞ்சாப் மற்றும் சண்டிகரை எடுத்து தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பள்ளிக் கல்வியை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்தி மத்திய அரசு பட்டியலாக வெளியிட்டது.
இதன்படி 2019- 2020 ஆம் ஆண்டிற்கான பட்டியலை மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி பஞ்சாப் மாநிலம் 929 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மத்திய ஆட்சிப் பகுதியான சண்டிகர் 912 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளது.
தமிழகம் 906 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் கேரளா 901 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் அதே 901 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.






