--- --:--:-- --

கடலுக்குள் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ள இளைஞர்..!

13

சைக்கிள்  ஓட்டி செல்வதே சாதனையாக இருக்கும் இந்த காலத்தில் இளைஞர் ஒருவர் கடலுக்குள் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

 

வாகன பெருக்கம் காரணமாக சைக்கிள் ஓட்டி செல்வது அரிதாகிவிட்ட நிலையில் பெட்ரோல் விலை உயர்வு ஊரடங்கு காரணமாக சைக்கிள் போக்குவரத்து உலகமெங்கும் அதிகரித்து வருகிறது.

 

உடல் ஆரோக்கியம் விழிப்புணர்வு காரணமாகவும், நீரிழிவு நோயாளிகள், உடல் பருமன் கொண்டவர்கள் தொப்பையை குறைக்கும் எண்ணம் உள்ளவர் போன்றவர்கள் சைக்கிளில் செல்வதை வழக்கமாக்கி வருகின்றனர்.

 

இதனால் சைக்கிள் ஓட்டுவதற்கான சாலையில் தனி பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.

 

இதேசமயம் புதுச்சேரியை சேர்ந்த வாலிபர் அரவிந்த் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை பகுதியில் நிலப்பரப்பில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் கடலில் சென்று சைக்கிள் ஓட்டி சென்று சாகசம் புரிந்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon