தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு..! அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் என்னென்ன..?
மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். காய்கறி பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
இறைச்சி கடைகள் மற்றும் மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்கள் உடன் செயற்பட அனுமதிக்கப்படும். கணினி பழுது நீக்கும் காடை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
காய்கறி பழங்கள் விற்பனை தொடர்ந்து செயல்படும். ஆட்டோவில் மூன்று பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும். எலக்ட்ரிஷன், பழுது நீக்குவோர் உள்ளிட்ட சுய தொழில் புரிவோருக்கு இ பதிவுடன் அனுமதி. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளில் சில காரணங்களுக்காக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, நீலகிரி, குற்றாலம், செல்ல அனுமதி. கல்வி புத்தகங்கள், எழுது பொருட்கள், விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்.
சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 மட்டுமே வழங்கப்படும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு, பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கப்படும். வாகனங்களின் உதிரிப்பாக விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படும்.
திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு 11 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.





