நித்யானந்தா வெளியிட்ட புதிய வீடியோவால் சர்ச்சை..!
கைலாசா நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சர்ச்சை சாமியார் நித்யானந்தா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சர்ச்சை சாமியார் நித்தியானந்தா மீது குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமை போன்ற புகார் அடிப்படையில் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன .இதையடுத்து தலைமறைவான நித்யானந்தா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
கைலாசா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் வெப்சைட் முகவரியையும் வெளியிட்டார். இந்த கைலாச நாடு எங்கு உள்ளது என்பது தற்போது வரை தெரியாத நிலையில் அங்கிருந்து பேசுவது போல் நித்தியானந்தா அவ்வப்போது புதிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
கைலாசா நாட்டின் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நித்தியானந்தா திடுக்கிடும் தகவல்களுடன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.






