--- --:--:-- --

தமிழகத்தில் சற்றே குறைந்த கொரோனா: 24,405  பேருக்கு தொற்று உறுதி..460 பேர் பலி!

5

மிழகத்தில் தற்போது 2,80,426  பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் இன்று 24,405  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 32,221 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 66 ஆயிரத்து 660 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில்  460பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது.

 

சென்னையில் இன்று மேலும் 2,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 2,980 பேரும்,  திருப்பூரில் 1,264 பேரும், ஈரோட்டில் 1,671 பேரும், சேலத்தில் 1,253 பேருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon