கருப்பு பூஞ்சையால் தமிழகம் முழுவதும் 400 பேர் பாதிப்பு..!
கருப்பு பூஞ்சையால் தமிழகம் முழுவதும் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 113 பேரும், வேலூரில் 74 பேரும், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் 43 பேர், சேலத்தில் 38 பேர், மதுரையில் 26 பேர் கருப்பு பூஞ்சையுடன் சிகிச்சையில் உள்ளனர். இதேபோல தஞ்சையில் 23 பேர், திருச்சியில் 21 பேர், கிருஷ்ணகிரியில் 18 பேர் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 196 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 204 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




