--- --:--:-- --

பள்ளி வாட்ஸ் அப் குழுவிலும் ஆபாச வீடியோவை ஆசிரியர் பகிர்ந்துள்ளாரா..?

13

பாலியல் புகார் விவகாரத்தில் கைதான ஆசிரியர் பணியாற்றிய பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர். சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் அத்து மீறியதாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த விவகாரம் தொடர்பாக பெற்றோரும், மாணவர்களும் ஏற்கனவே புகாரளித்த நிலையில் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது குறித்து விசாரணை நடத்த காவல்துறை சம்மன் அனுப்பியது.

 

அதன்பின் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் ஆகியோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி அவர்களிடம் தியாகராயநகர் துணை ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 

பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ள வாட்ஸ்அப் குழுவில் ஆசிரியர் மோசமான குறுந்தகவல்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு இருப்பதால் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon