கொரொனா நோயாளி போல் பொது வெளியில் நடித்து விழிப்புணர்வு..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காவல்துறையினர் வித்தியாசமான முறையில் கொரொனா விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினர். நாயிடுபுரம் என்னும் பகுதியில் கொரொனா நோயாளி தப்பி ஓடி வந்தது போன்றும், அவர் பொதுமக்களிடம் உதவி கேட்பது போலவும் நாடகம் அரங்கேற்றப்பட்டது.
இதனை பொதுமக்கள் நிஜமென நம்பியதால் ஒருவித அச்சம் நிலவியது. இதனையடுத்து இது விழிப்புணர்வு நாடகம் என்று பொது மக்கள் முக கவசம், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
இந்த விழிப்புணர்வு நாடகத்தை நிஜம் என்று நம்பியதால் நாயுடுபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




