--- --:--:-- --

சாணியை உடம்பில் பூசினால் கொரொனா பரவாது என்பது மூடநம்பிக்கை..!

7

கொரொனா தொற்றை குணப்படுத்தும் என்ற மூடநம்பிக்கையில் மாட்டு சாணம், கோமியம் உட்கொண்டால் பிற நோய்கள் பரவலாம் என இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள குருகுலத்தில் மாட்டு சாணத்துடன் கோமியத்தை கலந்து உடலில் பூசிக் கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர்.

 

இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். பெருந்தொற்று அண்டாது என நம்பினார்கள். மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சைடுஸ் கேடிலா நிறுவன தலைமை அதிகாரி அங்கு சென்று சில மருத்துவர்களும் மாட்டு சாணம் கோமியம் கலந்த கலவையைப் பூசி கொண்டு சிறிது நேரம் இருந்துவிட்டு பால் அல்லது மோர் ஆல் கழுவிக் கொண்டு செல்வதாக கூறுகிறார்.

 

இது போன்ற செயல்களை இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாட்டு சாணம் அல்லது சிறுநீர் ஆகியவற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு பயன்படுத்துவதாக உறுதியான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை என இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon