--- --:--:-- --

நாளை முதல் 2 ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன் வழங்கப்படும்..!

5

மிழக அரசின் பெருந் தொற்று நிவாரண தொகை 2000 ரூபாய் பெறுவதற்காக வழங்கப்பட்டிருக்கும் டோக்கன் எப்படி இருக்கும் என தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்று உடனே முதல் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் இரண்டு தவணையில் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 

அந்த வகையில் முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். நாளை முதல் தரப்பட்டு தினமும் 200 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் புதிதாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட டோக்கன் போல் அல்லாமல் நாளை முதல் வழங்கப்படும் டோக்கன் தலைவர்கள் முகமும், கட்சியின் பெயர் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon