--- --:--:-- --

தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி வழக்கு..!

3

தமிழகத்தில் கொரொனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அறிவிக்கக் கோரியும் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

சென்னை அமைந்தகரையில் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நோய் பரவலை தடுக்க முழு பொது முடக்கம் அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகள் 90 சதவீத மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும் நிலையில் இந்தியாவும் அவ்வாறு வழங்க வேண்டும் என்றும் தமிழகத்தில் மேலும் 2000 மருத்துவர்கள் ,செவிலியர்கள் துணை மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மேலும் செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் உற்பத்தியை தொடங்க வேண்டும் மாநிலங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon