லண்டனில் இருந்து சென்னை வந்த 450 ஆக்ஸிஜன் சிலிண்டர்..!
லண்டனில் இருந்து ஆக்சிஜன் எடுக்கப்பட்ட 450 சிலிண்டர்கள் சென்னைக்கு வந்து சேர்ந்துள்ளது. லண்டனில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் சென்னையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்துள்ளன.
இன்று அதிகாலை 5 மணிக்கு லண்டனிலிருந்து எகிப்து வழியாக இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலம் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட 450 டன் சிலிண்டர்கள் சென்னைக்கு வந்து அடைந்திருக்கின்றன. சுமார் 1000 மெட்ரிக் டன் அளவிற்கு இதில் ஆக்ஸிஜன் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் எவ்வளவு ஆக்சிஜன் இருக்கின்றன என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. தமிழகத்தில் தற்போதைய நிலையே ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேர் வரை கொரொனா தொற்றால் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். சென்னையை பொறுத்தவரை 32 ஆயிரத்து 500 பேர் வரை தற்போது சிகிச்சையிலிருந்து கொண்டுள்ளனர்.
ஒரு நாளைக்கு சுமார் 21 ஆயிரம் பேருக்கு தமிழகத்தில் கொரொனா தொற்று உறுதியாகிறது. சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களாக ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகிறது. படுக்கையில் மட்டுமே 60 விழுக்காடுக்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள்.
இதன் காரணமாக ஆக்சிஜனின் தேவை என்பது நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.





