பத்து ரூபாய்க்கு வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணி..!
சிதம்பரம் அருகே தொழிலாளர்களுக்கு பத்து ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தர்மம் செய்வோம் என்று தொழிலாளர்களை கவுரவபடுத்தினர்.
மேலும் தின கூலி தொழிலாளர்களுக்கு பத்து ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கினர். அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் என தொழிலாளர்கள் பலர் பிரியாணி வாங்கி சென்றனர்.






