அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள்..!
அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு விமானம் மூலம் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவை டெல்லி விமான நிலையத்திற்கும் வந்தடைந்தன. இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நெருக்கடியான சூழலில் சர்வதேச நாடுகள் பல்வேறு உதவிகளை அளிக்கின்றனர்.
உயிர் காக்கும் மருந்துகள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதன்படி அவசர சிகிச்சைக்கு தேவைப்படும் உயிர்காக்கும் மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், கவச உடைகள் அடங்கி விமானத்தில் விமான நிலையத்திற்கு வந்தடைந்தன.
விமானத்தில் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் அதிநவீன மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு வாரங்களில் கூடுதலாக மருந்து பொருட்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.






