கொரொனா சான்றிதழ் வைத்திருந்தாலும் உடல் வெப்ப நிலை அதிகமாக இருந்தால் வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல அனுமதியில்லை..!
வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருவோர் கொரொனா சான்றிதழ் வைத்திருந்தாலும் அன்றைய தினம் உடல்நிலை வெப்ப நிலை 98.6 டிகிரி க்கு மேல் இருந்தால் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 60 மையங்களில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் மருத்துவ குழுக்கள் இருக்கும் என்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் வரும் பொழுதுகொரொனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருந்தாலும் தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் வைத்திருந்தாலும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
98.6 டிகிரி உடல் வெப்பநிலைக்கு மேல் இருந்தால் அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் வாக்கு எண்ணிக்கைக்கான மேஜைகள் எண்ணிக்கையில் மாற்றம் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றும் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் இதற்கான பணிகள் நடந்து முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.






