புதுச்சேரியில் அதிகாரிக்கும் கட்டுப்பாடுகள்..!
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வேகமாக கொரொனா நோய் பரவி வரும் நிலையில் தொற்றை தடுக்க புதுச்சேரியில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அனைத்து வகையான மதுபான கடைகளை மூட வேண்டும் என கலால் துறை துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர மளிகை, காய்கறி கடைகள் மற்றும் உணவு சார்ந்த கடைகள் தவிர பிற கடைகளை 30ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான பொதுமக்களை கொண்ட வாகனப் போக்குவரத்து இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் வழிபடுவதற்கு வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருக்கும். என்றும் குடமுழுக்கு விழாக்கள் பக்தர்கள் இன்றி நடத்த அனுமதிக்கப் பட்டுள்ளது. எனினும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.







