--- --:--:-- --

80 கோடி பயனாளிகளுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள்..!

3

மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி பயனாளர்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

 

இரண்டாவது கொரொனா அலை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட அவர் இலவச உலக தானியங்கள் வழங்க 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு இருப்பதாக தெரிவித்தார். ஆக்சிஜன் பயண நேரத்தை குறைக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட பிரதமர் ஆக்சிஜனை கொண்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுவதாக கூறினார்.

 

ஒரு வழிப் பயண நேரத்தை குறைக்க ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகின்றன என்றும் மோடி தெரிவித்தார். எந்த ஒரு மாநிலத்திலும் செல்லக்கூடிய அவர்கள் தடுத்து நிறுத்த படாமல் அல்லது நடக்காமல் இருப்பதை ஒவ்வொரு மாநிலமும் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைக்குமாறு நரேந்திர மோடி மாநில அரசுகளை வலியுறுத்தினார்.

Leave a Reply

Right Menu Icon