திருடனை தைரியமாக மடக்கிப்பிடித்த 62 வயது மூதாட்டிக்கு பாராட்டு சான்றிதழ்..!
செயின் பறிப்பு திருடனை தைரியமாக மடக்கிப்பிடித்த 62 வயது மூதாட்டிக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமாத்தாள் பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ராமதாஸின் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார். உடனே இருசக்கர வாகனத்தை நகர விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டு சப்தம் எழுப்பினார் ராமாத்தாள்.
அதனை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து செயின் பறித்த நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். துணிச்சலுடன் செயல்பட்டு திருடனைப் பிடித்துக் கொடுத்ததால் ராமாத்தாள் கௌரவிக்கப்பட்டார்.






