--- --:--:-- --

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய இரண்டு கொரொனா நோயாளிகள்..!

6

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் இருந்த இரண்டு கொரொனா நோயாளிகள் தப்பியோடியுள்ளனர். பழனி அருகே தேவத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் நெய்க்காரப்பட்டி சேர்ந்த இளைஞர் ஒருவரும் கொரொனாவால் பாதிக்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்த நிலையில் நள்ளிரவில் இருவரும் மருத்துவமனையை விட்டு தப்பினர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அந்த இளைஞர் மருத்துவமனைக்கு திரும்பினார். தப்பியோடிய அந்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon