பையில் வைக்கப்பட்டிருந்த செல்போன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு..!
வழக்கமாக சார்ஜர் போட்டு வைத்துள்ள செல்போன்கள் வெடிப்பது, தீப்பிடிப்பது வழக்கம். ஆனால் சீனாவில் சார்ஜ் கூட போடாமல் பையில் வைக்கப்பட்டிருந்த சாம்சங் போன் தானாக தீப்பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுத் சைனா மார்னிங் கோஸ் பத்திரிக்கை தனது இணையதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளது.
அதில் ஒரு இளைஞர் தனது தோழியுடன் கூட்டம் மிகுந்த பகுதியில் நடந்து வந்து கொண்டு இருக்கிறார். அப்போது திடீரென்று இளைஞரின் பையில் தீ பற்றுகிறது. இதனால் பதறிப்போன அந்த இளைஞர் தோளில் இருந்த பையை கீழே போட்டு விடுகிறார்.
பையை பார்த்தபோது உள்ளே இருந்த செல்போன் தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது. 2016 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் செல்போன் தானாகவே வெடித்து தீ பிடித்துள்ளது.
இதுகுறித்து இளைஞர் தன் செல்போன் பேட்டரியில் பிரச்சினை இருந்தது என்றும், ஆனால் தீப்பற்றிய போது பவர்பேங்க் கூட போட்டு வைக்க வில்லை என்றும் செல்போன் தீப்பிடிக்க காரணம் என்னவென்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.






