காதல் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு ஆணவக் கொலை மிரட்டல்..!
ஆணவப்படுகொலை மிரட்டல் விடுப்பதால் பாதுகாப்பு கோரி காதல் கலப்பு திருமணம் செய்த இளம்பெண் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த ரம்யா பட்டியலினத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ரம்யா மனு தாக்கல் செய்துள்ளார். கொலை செய்துவிடுவதாக குடும்பத்தினர் மிரட்டுவதாகவும் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரம்யாவின் கணவர் மற்றும் உறவினர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.






