--- --:--:-- --

ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிப்பு..!

4

கொரொனா பரவல் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நாளை முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் என தலைமை பதிவாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

அதில் முக்கிய வழக்குகள் மற்றும் ஜாமின் வழக்குகளில் மட்டும் அரசு வழக்கறிஞர்கள் நேரடியாக ஆஜராக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற அனைத்து வழக்கு விசாரணையும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் எனவும் ஏப்ரல் 23ஆம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதற்கு முந்தையநாள் சூழல் குறித்து ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon