மதரீதியான விமர்சனத்தால் மாணவர்கள் எதிர்ப்பு..!
கேரளாவில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடனத்தை மதரீதியாக கொச்சைப் படுத்துவதாக கூறி மேலும் பல மாணவர்கள் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். திருச்சூர் மருத்துவ கல்லூரியை சேர்ந்த பயிற்சி மாணவர் ரசாக் என்பவர் மாணவி ஜானகியுடன் இணைந்து நடனமாடும் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் குறிப்பிட்ட மாணவர் மீது மதரீதியான விமர்சனம் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மருத்துவ மாணவர்கள் பலரும் நடனமாடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.






