யோகிபாபு மீது முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் அளித்துள்ள புகார்..!
GV Prakash Kumar, Arthana Binu & Others At The Sema Press Meet
காமெடி நடிகர் யோகிபாபு மீது தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு மீது தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் நடிகர் யோகிபாபு நடித்த புதிய திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது முடிதிருத்தும் சமூகத்தை சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவன இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






