ஈரோட்டில் ஒரே நாளில் முககவசம் அணியாத 2 ஆயிரம் பேருக்கு அபராதம்..!
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் முகக்கவசம் அணியாத 2,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அதிகாரிகள் குழுவுக்கான தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தேவையான அளவு தடுப்பூசி இருப்பதாக கூறிய ஆட்சியர் அரசு எடுக்க கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.






