தலைவி படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு..!
கொரோனா பாதிப்பு காரணமாக தலைவி படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள தலைவி படத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழியில் வரும் 23ஆம் தேதி தலைவி படம் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்ஷய் குமாரின் படமும் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டது.







