--- --:--:-- --

பஞ்சாபில் இரவு நேர ஊரடங்கு: அரசியல் தொடர்பான கூட்டங்களுக்கு தடை!!

download (2)

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்றைய காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

 

மகாராஷ்டிரா, டெல்லி அரசுகள் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மற்ற சில மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன.

 

இந்த நிலையில் பஞ்சாபில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 9 மணியில் இருந்து காலை ஐந்து மணி வரை மாநிலம் முழுவதும் வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும், அரசு தொடர்பாக பொதுக்கூட்டத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

மத்திய பிரதேச அரசு, சத்தீஸ்கர் மாநிலத்துடனான பொது போக்குவரத்திற்கு ஏப்ரல் 15-ந்தேதி வரை தடைவிதித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon