தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா… கமல்ஹாசன் பகீர் குற்றச்சாட்டு!
கோவை சட்டமன்றத் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக, மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், சென்னையில் தனது மகள்களுடன் சென்று வாக்களித்துவிட்டு, தான் போட்டியிடும் கோவை தெற்குத் தொகுதியை பார்வையிட, விமானத்தில் கோவைக்கு வந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு கமல் அளித்த பேட்டியில், கோவை தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கப்பட்டு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. அதற்கான நகல் என்னிடம் இருக்கிறது. இந்த பணப்பட்டுவாடா குறித்து ஆணையத்தில் புகாரளிக்கப்படும் என்றார்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கமல்ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் தரப்பில் இருந்து மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர்.





