--- --:--:-- --

விஜய் சைக்கிளில் வந்தது ஏன்? சர்ச்சையானதை அடுத்து பி.ஆர்.ஓ. விளக்கம்!

vijay 04

வாக்குச்சாவடி அருகிலேயே இருப்பதாலும், கார் செல்ல முடியாத காரணத்தாலும் தான் நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்ததாக, அவரது பி.ஆர்.ஓ. விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் தனது சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தார். உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் சைக்கிளில் ஓட்டு போட வந்தது பரபரப்பாக பேசப்பட்டது. வரும் போது சைக்கிளில் வந்த விஜய், போகும் போது ஸ்கூட்டரில் சென்றார்.

 

சைக்கிளில் வந்த விஜய் வாக்குச்சாவடிக்குள் ஓட்டுப்போட்டுக் கொண்டிருக்கும்போது, பெட்ரோல் – டீசல் விலையேற்றத்தினால்தான், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்தான் விஜய் சைக்கிளில் வந்தார் என்று செய்திகள் பரவின. திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியும் இவ்வாறு குறிப்பிட்டதால், விஜய் சைக்கிளில் வந்தது அரசியலாக்கப்பட்டது.

இதனிடையே, நடிகர் விஜய் ஏன் சைக்கிளில் வந்தார் என்பதற்கு, அவரது பி.ஆர்.ஓ. விளக்கம் தந்துள்ளார். அதாவது, விஜயின் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் வாக்குச்சாவடி இருந்தது. அங்கு கார் நிறுத்தவோ, நுழையவோ வசதியில்லை. அருகில் இருக்கிறது என்பதால் நடிகர் விஜய் சைக்கிளை பயன்படுத்தினார். இதற்கு வேறு எந்த அர்த்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon